அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும், ரஷிய அதிபர் புதினும் சிரியா நிலவரம் தொடர்பில் சந்திப்பு

Written by vinni   // October 4, 2013   //

1375692026_obama-putinசிரியாவில் நடந்து வருகிற உள்நாட்டுப் போரில் அதிபர் பஷார் அல் ஆசாத்திற்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் மீது பேரழிவை ஏற்படுத்தும் ரசாயன ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த ஆகஸ்டு மாதம் 21-ந்தேதி நடந்த இந்தத் தாக்குதலில் 1,300-க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

சிரியா அதிபரை தண்டிக்கும் வகையில் அமெரிக்கா ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள விரும்பியது. ஆனால் இந்த விவகாரத்தில் சிரியாவின் நட்பு நாடான ரஷியா தலையிட்டு போர் அபாயத்தை தவிர்த்தது.

சிரியா தன் வசமுள்ள ரசாயன ஆயுதங்களை சர்வதேச குழுவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ரஷியா கூறியது. தற்போது அந்தப்பணிகள் நடந்து வருகின்றன. சிரியா மீதான அமெரிக்க தாக்குதலை தடுத்து நிறுத்தியதற்காக ரஷிய அதிபர் புதினுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவில் அடுத்த வாரம் ஆசிய பசிபிக் உச்சி மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டின் இடையே அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும், ரஷிய அதிபர் புதினும் சந்தித்துப் பேச உள்ளதாக கிரெம்ளின் மாளிகை அறிவித்துள்ளது. இந்த சந்திப்பின்போது இரு தலைவர்களும் சிரியா நிலவரம் குறித்து விவாதிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.