சீனா ஓபன் டென்னிஸ்போட்டியில் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

Written by vinni   // October 3, 2013   //

Cara+Black+Toray+Pan+Pacific+Open+Day+6+2KyfSW04KXDlசீன ஓபன் டென்னிஸ் போட்டிகள் தலைநகர் பெய்ஜிங்கில் நடந்து வருகின்றன. இன்று நடந்த பெண்களுக்கான இரட்டையர் கால் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா – காரா பிளாக் (ஜிம்பாப்வே) ஜோடி, சீன தாய்பேயின் யுங் ஜேன் – ஜீ ஜெங் ஜோடியை எதிர்த்து விளையாடியது.

அதிக விளையாட்டு அனுபவம் இல்லாத சீன தாய்பேய் ஜோடியை ஒரு மணி நேரம் 8 நிமிடங்கள் நடந்த போட்டியில் சானியா மிர்சா ஜோடி வென்றது. இதில் அவர்கள் 6-4, 6-1 என்ற  நேர் செட்டுகளில் எளிதில் வெற்றிப்பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

கடந்த வாரம் ஜப்பானில் நடைபெற்ற பான் பசிபிக் டென்னிஸ் இறுதிப்போட்டியில் சானியா மிர்சா-காரா பிளாக் ஜோடி வெற்றிபெற்று கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.