நியூயோர்க்கில் மகிந்தவை சந்திக்க நேரம் கிடைக்கவில்லை! – மன்மோகன் சிங்

Written by vinni   // October 3, 2013   //

India's Prime Minister Manmohan Singh smiles in New Delhiஇலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் தன்னை சந்திப்பதற்கு நேரம் கேட்டிருந்த போதும் அதனை தன்னால் வழங்க முடியாது போனதாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
நியூயோர்க்கில் இருந்து வந்த அவர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கையிலேயே இந்த விடயத்தை கூறினார்.

இலங்கை குறித்து அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு,

தங்களைச் சந்திக்க வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரும்பியதாகவும் ஆனால், அந்த சந்திப்பை தாங்கள் தவிர்த்துவிட்டதாகவும் கூறப்படுகிறதே?

இலங்கை ஜனாதிபதி என்னிடம் கடந்த மாதம் 24-ம் திகதிக்கும் 27-ம் திகதிக்கும் இடையில் ஐ.நா. வரும் போது சந்திக்க நேரம் ஒதுக்கித் தரும்படி கேட்டிருந்தார். நேரம் கேட்டிருந்தது உண்மை. ஆனால், நியூயார்க் சென்றடைந்ததே 27-ம் திகதி மாலையில்தான் என்பதால் அவரைச் சந்திக்க இயலவில்லை.

இலங்கை வடக்கு மாகாணத் தேர்தலில் தமிழ் அமைப்புகளின் கூட்டணி மிகப்பெரிய வெற்றி அடைந்திருக்கும் வேளையில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அவர்களுக்கு அதிக அதிகாரத்தை பெற்றுத் தரும் வாய்ப்பை தாங்கள் இழந்தது ஏன்?

ஆரம்பம் முதலே வடக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வும் அதிக அதிகாரங்களும் தரப்பட வேண்டும் என்பதை இந்தியா வலியுறுத்தி வந்திருக்கிறது. இப்போதும் அதை வலியுறுத்துகிறோம். இந்தியாவின் முழு முனைப்பும் அதற்காக இருக்கும் என்றார்.


Similar posts

Comments are closed.