மகிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்குள் படையெடுக்கும் பாம்புகள்- கொழும்பு காசல் பெண்கள் மருத்துவமனையில் நாக பாம்பு

Written by vinni   // October 3, 2013   //

Snake New Forest Group of Adders 01அம்பாந்தோட்டை மத்தள மகிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்குள் பாம்புகள் படையெடுப்பதாக அங்கு பணியாற்றி வரும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
விமான நிலையத்திற்கு அருகில் அண்மையில் இருந்த மலை பாம்பு ஒன்றை பிடித்து அதனை மீண்டும் காட்டில் விட ஊழியர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

அதேவேளை மழைக்காலங்களில் அதிகளவான பாம்புகள் விமான நிலையத்திற்கு அருகில் வருவதாக விமான நிலைய ஊழியர்கள் கூறுகின்றனர்.

விமான நிலையத்தில் உள்ள சிறப்பு விருந்தினர்களுக்கான பிரிவில் மாபிலா பாம்பு இருந்து கண்டுப்பிடிக்கப்பட்டது எனவும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

காட்டு யானைகள், மயில்கள் போன்ற பறவைகளினாலும் மத்தள விமான நிலையத்தின் பணிகளுக்கு பெரும் தடைகள் ஏற்பட்டதுடன், அவற்றை தடுக்க அதிகாரிகள் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டி நிலைமை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு காசல் பெண்கள் மருத்துவமனையில் நாக பாம்பு

கொழும்பு காசல் பெண்கள் மருத்துவமனையில் புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கான பிரிவிற்கு அருகில் உள்ள மருந்து களஞ்சியத்திற்குள் இருந்த நாக பாம்பு ஒன்றை மருத்துமனையின் ஊழியர்கள் பிடித்ததாக வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவித்தன.

சுமார் ஒன்றரை அடி நீளம் கொண்ட நாக பாம்பு ஒன்றே மருந்து களஞ்சியத்தில் இருந்துள்ளது. பிடிக்கப்பட்ட பாம்பு தெஹிவளை விலங்கியல் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை வைத்தியசாலையில் உள்ள சகல களஞ்சியங்கள் மற்றும் விடுதிகள் சோதனை செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொழும்பில் நகர மத்தியில் இருக்கும் மருத்துமனையில் நாக பாம்பு கண்டுப்பிடிக்கப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Similar posts

Comments are closed.