கூட்டமைப்புக்கு ஆதரவு தெரிவித்ததால் உயிர் அச்சுறுத்தல்

Written by vinni   // October 3, 2013   //

thereatஅதிவேக படகில் சென்று இந்தியாவில் இறங்கி பரபரப்பை ஏற்படுத்திய நபர் சென்னை மத்திய புழல் சிறைக்கு கொண்டு செல்லப்படவுள்ளார்.

உயிர் அச்சுறுத்தல் காரணமாகவே தான் தமிழ்நாட்டிற்கு தப்பி வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிவேக படகு ஒன்றின் மூலம் 37 வயதுடைய எம்.செல்வராஜா என்பவர் நேற்று (02) காலை தனுஸ்கோடி – முனை பகுதியைச் சென்றடைந்தார்.

இவரை தனுஸ்கோடி பொலிஸார் கைது செய்தனர்.

இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தான் 10,000 ரூபா செலுத்தியே படகில் வந்ததாக கூறியுள்ளார்.

மேலும் நடந்து முடிந்த வட மாகாண தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்து செயற்பட்டதால் சில சிங்கள கட்சிகள் தன்னை அச்சுறுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிறம்பூசும் தொழில் செய்யும் தனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டதால் தமிழ்நாட்டிற்கு தப்பி வந்ததாக எம்.செல்வராஜா தெரிவித்துள்ளார்.

1984ம் ஆண்டு இந்தியாவிற்கு அகதியாகச் சென்ற இவர் திருச்சி முகாமில் வசித்து வந்துள்ளார். பின் 2011ம் ஆண்டு மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பியுள்ளார்.

இந்நிலையில் எம்.செல்வராஜா கடவுச்சீட்டு சட்டத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று புழல் சிறையில் அடைக்கப்படவுள்ளார்.


Similar posts

Comments are closed.