இலங்கை அணி வீரர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தின் முக்கிய சந்தேகநபர் விடுதலை

Written by vinni   // October 3, 2013   //

SRILANKAலாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் முக்கிய சந்தேகநபராக கருதப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மீது லாகூரில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

தாக்குதலில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சுபைர் என்ற நாயக் முகமதுவின் விளக்கமறியலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என்று பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசு நீதிமன்றத்தில் வலியுறுத்தியது.

இந்தக் கோரிக்கையை லாகூர் உயர்நீதிமன்ற ஆய்வுக்குழுவில் அடங்கிய மூன்று நீதிபதிகள் நிராகரித்துவிட்டனர்.

மேலும் அவரை விடுவித்தால் பஞ்சாப் மாகாணத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்ற அரசுத் தரப்பின் வாதத்தையும் நீதிபதிகள் ஏற்கவில்லை.

அதன்படி சந்தேகநபர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


Similar posts

Comments are closed.