ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி மக்களை கொல்ல திட்டமிட்ட பிரதம

Written by vinni   // October 3, 2013   //

download (2)ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி பழங்குடியின மக்களை கொன்றுவிட இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் திட்டமிட்டது தற்போது தெரியவந்துள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த பிரபல வரலாற்று புத்தக ஆசிரியர் கைல்ஸ் மில்டன்.

இவர் ஸ்காட்லாந்தின் விக்டவுனின் நடைபெற்று வரும் விக்டவுன் புத்தக விழாவில் கலந்துகொண்டு தனது புதிய புத்தகமான ரஷ்யன் ரூலெட் குறித்து விளம்பரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், முன்னாள் இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதில் மிகவும் விருப்பமாக இருந்தார்.

20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் தொல்லை கொடுத்து வந்த பழங்குடியின மக்களை ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி கொல்ல சர்ச்சில் விரும்பினார்.

இது குறித்த மெமோவையும் அவர் இந்திய அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார்.

அதில், வடகிழக்கு பகுதியில் உள்ளவர்கள் மிகவும் தொல்லை கொடுக்கிறார்கள். அவர்களை விஷவாயு செலுத்தி கொன்றுவிடுவோம் என்று தெரிவித்திருந்தார். இந்த மெமோவை அனுப்பியபோது சர்ச்சில் இங்கிலாந்து பிரதமர் கிடையாது.

இங்கிலாந்து நாட்டவர் பரம ரகசியமாக எம் டிவைஸ் என்ற பயங்கர ரசாயன ஆயுதத்தை வில்ட்ஷயரில் உள்ள போர்டன் லபாரடரீஸில் தயாரித்தனர்.

இதுவரை தயாரிக்கப்பட்ட ரசாயன ஆயுதங்களிலேயே இது தான் மிகவும் மோசமானது. அதை தயாரித்தார்கள் ஆனால் பயன்படுத்தவில்லை.

இந்த எம் டிவஸை ரஷ்யாவின் போல்ஷெவிக்ஸுக்கு எதிராக பயன்படுத்த வேண்டும் என்பது தான் சர்ச்சிலின் திட்டம்.

சர்ச்சில் ஒரு சிறந்த பிரித்தானியர், ஆனால் அவரின் குணத்திற்கு மறுபக்கமும் உண்டு. அவர் ரசாயன ஆயுத பயன்படாட்டை ஊக்குவித்தவர் என்று பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார்.


Similar posts

Comments are closed.