ரஷ்ய ஜனாதிபதியின் பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரை

Written by vinni   // October 3, 2013   //

images (4)2014-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சிரியாவில் ஏற்பட்டுள்ள உள்நாட்டுப் போரில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட புகாரில், அமெரிக்கா தாக்குதல் நடத்த தயாரானது.  இந்நிலையில் சிரியா மீதான தாக்குதலை ரஷ்யா தடுத்து நிறுத்தி, பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்தது.  அரசியல் ரீதியாகவும் ரஷிய தூதரகம் மூலமும் உரிய நடவடிக்கை எடுத்து போர் பதற்றத்தை தணித்தார் விளாதிமீர் புதின்.  இதனை பாராட்டி, உலக நாடுகளிடையேயான ஆன்மீக ஒருமைப்பாடு மற்றும் ஒத்துழைப்புக்கான சர்வதேச அகாதமி என்ற அமைப்பு, 2014-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை புதினுக்கு வழங்க பரிந்துரை செய்துள்ளது.  இதற்கான பரிந்துரைக் கடிதம் நோபல் பரிசு கமிட்டிக்கு கடந்த மாதம் 16-ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.  1990ஆம் ஆண்டு முன்னாள் சோவியத் யூனியன் அதிபர் மிகைல் கார்பசேவுக்கும், 2009 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.