ராமர் பட்டாபிஷேக ஓவியம் – திப்பு சுல்தானின் வாள் லண்டனில் ஏலம்

Written by vinni   // October 3, 2013   //

swordமைசூரை ஆண்ட திப்பு சுல்தானின் வாள், ராமரின் பட்டாபிஷேக ஓவியம் உள்ளிட்ட இந்தியாவின் தொன்மை மிக்க கலைப்பொருட்கள் லண்டனில் வரும் 9ம் தேதி ஏலம் விடப்படுகின்றன.

இதில் ராமரின் பட்டாபிஷேகத்தை குறிக்கும் ஓவியத்தை கடவுள்களும், தேவர்களும் பங்கேற்பது போன்ற காட்சிகள் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளன.

இந்த ஓவியம் 1 கோடி ரூபாயில் இருந்து 1 1/2 கோடி ரூபாய் வரை விலை போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மைசூரை ஆண்ட திப்பு சுல்தானின் போர்வாள் 80 லட்சம் ரூபாயில் இருந்து 1 கோடியே 20 லட்சம் ரூபாய் வரையிலும், மொகலாய மன்னர்கள் பயன்படுத்திய வைரங்கள், தங்க தாம்பாளம்(டிரே), தங்க கலசம் போன்றவை 2 கோடி முதல் 3 கோடி வரையிலும் 17ம் நூற்றாண்டை சேர்ந்த தங்க முலாம் பூச்சுடன் மரகதம் மற்றும் செம்பு கற்கள் பொறிக்கப்பட்ட குத்துவாள் 80 லட்சம் ரூபாயில் இருந்து 1 கோடியே 20 லட்சம் ரூபாய் வரையிலும் விலை போகலாம் என லண்டனில் உள்ள சாத்பை ஏல நிறுவனத்தினர் கூறுகின்றனர்.

மொத்தம் 90 அரிய கலைப்பொருட்கள் 9ம் தேதி ஏலம் விடப்படுகின்றன.


Similar posts

Comments are closed.