கூட்டமைப்பின் நேற்றைய கூட்டமும் முடிவின்றி முடிந்தது

Written by vinni   // October 3, 2013   //

TNA-logoவட மாகாண சபை அமைச்சர்கள் தெரிவு தொடர்பில் நேற்று (02) இரவு கொழும்பில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டத்தில் எவ்வித முடிவுகளும் எடுக்கப்படவில்லை.

வடக்கு மாகாண முதலமைச்சரின் பதவிப் பிரமாணம் மற்றும் வடமாகாண அமைச்சரவையின் நியமனம் குறித்த தீர்மானத்துக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று கொழும்பில் கூடியது.

இக்கூட்டத்தில் பல விடயங்கள் குறித்து ஆராயப்பட்ட போதும் இறுதி முடிகள் எதனையும் எடுக்கவில்லை என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இந்தநிலையில் நாளை (04) காலை மீண்டும் கூடி ஆராய்ந்து முடிவெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

முதலமைச்சர் பதவிப்பிரமாணத்தை எங்கே யாரின் முன்னால் மேற்கொள்வது என்பது குறித்து நேற்றைய கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.