சுற்றுலா சென்ற போது நடந்த விபரீதம்! ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

Written by vinni   // October 2, 2013   //

johnson_family_killed_003அமெரிக்காவில் சுற்றுலா சென்ற போது நடந்த விபத்தில் 5 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தை சேர்ந்த டானி ஜான்சன், எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் பள்ளி ஒன்றில் பகுதி நேர நீச்சல் பயிற்சியாளராகவும் வேலை பார்த்து வருகிறார்.

இவர் தனது மனைவி டாவ்னா, கிரேசி(வயது 13) மற்றொரு மகள் குளோவா ரெய்ன் மற்றும் 2 உறவினர்கள் ஆகியோர் விடுமுறையில் கொலாராடோ மாகாணத்தில் உள்ள புவனே விஸ்டா மலைப்பகுதிக்கு வந்தனர்.

நேற்று பகலில் அப்பகுதியில் காரை நிறுத்தி விட்டு மலைப்பகுதியில் இளைப்பாறினர்.

அப்போது திடீரென பூகம்பம் வருவது போல் சத்தம் கேட்டதுடன், மரங்கள் ஒடிந்து விழுந்தது.

இதனை பார்த்த ஜான்சன் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள் என்று கூறியபடியே தனது மகள் கிரேசியை தூக்கி கொண்டு மேடான இடத்திற்கு சென்றார்.

உடனடியாக மற்றவர்களை மீட்பதற்காக சென்ற போது, அதற்குள் ஏராளமான பாறைகள் உருண்டு விழுந்து அனைவரும் புதையுண்டனர்.

அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த கிரேசி, கதறி அழுதார்.

புதையுண்டவர்களின் உடல்களை மீட்கும் பணி நடப்பதாக நகர மேயர் ஜான் ஸ்பீஸ் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.