Jolla அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி

Written by vinni   // October 2, 2013   //

jolla_smartphone_001Jolla எனும் நிறுவனமானது தனது முதலாம தலைமுறை ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.
5 அங்குல அளவு மற்றும் 960 x 540 Pixel Resolution உடைய HD தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது 1.4 GHz வேகத்தில் செயலாற்றவல்ல Snapdragon Processor, பிரதான நினைவகமாக 1 GB RAM ஆகியவற்றினை உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது.

141 கிராம் நிறையுடைய இப்புதிய கைப்பேசியில் 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் 2 மெகாபிக்சல்களை உடைய துணையான கமெரா போன்றனவும் காணப்படுகின்றன.

இவற்றில் காணப்படும் 2100 mAH மின்கலமானது 3G வலையமைப்பு தொடர்பாடலின்போது தொடர்ச்சியாக 8 மணித்தியாலங்களுக்கு மின்னை வழங்கக்கூடியவாறு இருக்கின்றது.

மேலும் இதன் விலையானது 400 யூரோக்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது


Similar posts

Comments are closed.