முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தமிழ் பிரிவினைவாதத்துடன் இணைந்து செயற்படுகிறார்!- தேசிய சுதந்திர முன்னணி

Written by vinni   // October 2, 2013   //

SLMC72012ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் முஸ்லிம் இனத்தை காட்டிக் கொடுத்து வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸாமில் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் மன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில் இருந்து முஸ்லிம் மக்கள் மன்னர்களுடனேயே தமது கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டனர். அவர்கள் பிரிவினைவாதிகளுடன் இணைந்து செயற்படவில்லை.

ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் முஸ்லிம் மக்களின் அபிமானத்தை காலில் மிதித்து தமிழ் பிரிவினைவாத தொட்டிலுக்கு இலங்கை முஸ்லிம் மக்களை கொண்டு செல்ல முயற்சித்து வருகிறார்.

அன்று பிரபாகரனுடன் உடன்படிக்கையை மேற்கொண்ட அவமதிப்பான வரலாற்றை கொண்ட ஹக்கீம், இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரிவினைவாத வழிமுறைகளுடன் இணைந்து செயற்பட்டு வருகிறார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மாகாணத்திற்கு 13வது திருத்தச் சட்டத்தில் உள்ள சகல அதிகாரங்களையும் கோரி வரும் சந்தர்ப்பத்தில் கிழக்கு மாகாண சபையில் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் இந்த அதிகாரங்களை கோரி யோசனை ஒன்றை கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளமை இதற்கு சிறந்த உதாரணமாகும்.

ஹக்கீமின் இந்த துஷ்ட செயற்பாடுகளால் முஸ்லிம் மக்கள் பாதகமான குழியில் விழுந்து விடுவார்கள். அந்த மக்கள் அப்படியான நிலைமைக்கு செல்வதை தடுக்க சிங்கள,தமிழ், முஸ்லிம் மக்கள் தேசிய ஒற்றுமையுடன் செயற்பட வேண்டியது அவர்களின் தேசிய கடமை என்றார்.


Similar posts

Comments are closed.