பயங்கரவாத தாக்குதலை உளவு பார்க்கும் அமெரிக்கா

Written by vinni   // October 2, 2013   //

white-house650_0அமெரிக்க உளவுப்பிரிவு, பயங்கரவாத தாக்குதல்கள் நிகழாமல் தடுக்க மட்டுமே பயன்படுத்தப்படுவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் வெளியாகும் நியூயார்க் டைம்ஸ், கடந்த 2010ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் முக்கிய பிரமுகர்கள் செல்லும் இடங்களை கண்காணிக்க உளவுப்பிரிவுகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக அமெரிக்க அரசின் ரகசிய தகவல்களை அம்பலப்படுத்தி வரும் ஸ்னோடென் வெளியிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இதற்கு மறுப்பு தெரிவித்து வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் ஜே கார்னே கூறுகையில், “பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் நிகழாமல் தடுக்கவும், அவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்கவும் மட்டுமே அமெரிக்க உளவுப்பிரிவுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த செயல்பாடுகளைத்தான் உலகின் பல்வேறு நாடுகளும் பின்பற்றி வருகின்றன.

தேசிய பாதுகாப்பு அமைப்பு (என்எஸ்ஏ) செயல்பாடுகளை அட்டர்னி ஜெனரலும், பல்வேறு சந்தர்ப்பங்களில் நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளன’ என்று தெரிவித்தார்.


Similar posts

Comments are closed.