இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்குமாறு கோரிக்கை

Written by vinni   // October 2, 2013   //

vaikoஇலங்கை மீது இந்தியா பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

ராமதாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த 35 மீனவர்கள் 4 படகுகளில் மன்னார் வளைகுடா பகுதியில் ஆகஸ்ட் 26-ஆம் திகதி மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, இலங்கை ராணுவம் அவர்களைக் கைது செய்தது.

இந்நிலையில் செப்டம்பர் 23-ஆம் திகதி இலங்கை பந்தளம் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட அந்த மீனவர்கள் இதுவரை தாயகம் திரும்பவில்லை.

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர்கள், கொழும்பு போக்குவரத்து காவலர் குடியிருப்பு பகுதியில் ஓர் அறையில் சட்டவிரோதமாக காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 4 விசைப் படகுகளையும், மீன்பிடி வலைகளையும் நீதிமன்றப் பொறுப்பிலேயே வைத்துள்ளனர்.

சொந்த நாட்டு மக்களைப் பாதுகாத்து அவர்களின் உடைமைகளை முறையாகப் பாதுகாத்து தாயகத்துக்கு அனுப்ப வேண்டிய கடமையிலிருந்து இந்தியத் தூதரகம் தவறி

யுள்ளது. இதற்குப் பிறகாவது மத்திய அரசு விரைந்து செயல்பட்டு, பாம்பன் மீனவர்கள் 3 பேரை மீட்டு, இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும்.

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை இலங்கை அரசு தொடரும் பட்சத்தில், அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். தூதரக உறவைத் துண்டித்து தமிழக மீனவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்


Similar posts

Comments are closed.