இலங்கை மீனவர்கள் ஐவர் தூத்துக்குடி சிறையில் தடுத்து வைப்பு

Written by vinni   // October 2, 2013   //

fish  manஇந்திய எல்லையில் மீன் பிடித்த குற்றச்சாட்டின்படி கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் ஐவரும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

நீர்க்கொழும்பைச் சேர்ந்த மீனவர் ஐந்து பேர், எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கடந்த செப்டெம்பர் மாதம் 17ஆம் திகதி தூத்துக்குடி, தரவைக்குளம் கடலோர பாதுகாப்பு குழும பொலிஸாரிடம் இவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.

இதன்பின்னதாக கடந்த 18ஆம் திகதி ராமநாதபுரம் சி.ஜே.எம்., நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது ஒக்டோபர் முதலாம் திகதிவரை அனைவரையும், தூத்துக்குடி சிறையில் துடுத்து வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டது.

இந்நிலையில் நேற்று ஐந்து பேரும் மீண்டும் ராமநாதபுரம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது ஐவரையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை சிறையில் தடுத்து வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.


Similar posts

Comments are closed.