அமெரிக்க டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி

Written by vinni   // October 2, 2013   //

dollerசர்வதேச நாடுகளில் அமெரிக்க டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அரசாங்கம் பகுதியளவில் ஸ்தம்பிதம் அடைந்துள்ள நிலையில், நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது.

எனினும் டொலரின் பெறுமதி எதிர்பார்த்ததை விட வீழ்ச்சியடையவில்லை என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வரவு செலவுத் திட்டத்திற்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளிக்காத நிலையில் இந்த ஸ்தம்பிதம் ஏற்பட்டிருந்தது.

யூரோவிற்கு எதிரான டொலரின் பெறுமதி 5 மாதங்களின் பின்னர் குறைவடைந்துள்ளதுடன், சுவிஸ் பிராங்கிற்கு எதிரான அமெரிக்க டொலரின் பெறுமதி ஒன்றரை ஆண்டுகளின் பின்னர் குறைவடைந்துள்ளது.

இந்த வார இறுதியில் ஜப்பான் ஜென் மற்றும் பிரித்தானியாவின் பவுன்ஸ்சுக்கு எதிரான டொலரின் பெறுமதியிலும் வீழ்ச்சி ஏற்படலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.