உலகில் 80 கோடி பேர் பசியால் வாடுகின்றனர்

Written by vinni   // October 2, 2013   //

Poorஉலகில் எட்டில் ஒருவர் பட்டினியால் வாடுவதாக ஐநா அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் நிலவும் சூழல் குறித்து ஆராய்ந்த இந்த அறிக்கை 80 கோடி மக்கள் மோசமான பசியால் வாடுவதாகத் தெரிவித்துள்ளது.

சுறுசுறுப்பான, ஆரோக்கியமான வாழ்க்கையை பேணக்கூடிய அளவுக்கு உண்ணும் வசதியில்லாதோரே இந்தப் பட்டியலில் கணக்கெடுக்கப்பட்டுள்ளனர்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த எண்ணிக்கை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட எண்ணிக்கையை விட சற்றே குறைவு என்றாலும், 2015 ஆம் ஆண்டுக்குள் எட்டப்பட வேண்டிய புத்தாயிர வளர்ச்சி இலக்குகளை தொடாமல் போகக் கூடிய சாத்தியம் இருப்பதைத்தான் இது காட்டியுள்ளதாக இந்த அறிக்கை எச்சரித்துள்ளது.


Similar posts

Comments are closed.