சிரியாவில் சீன தூதரகம் மீது பீரங்கி தாக்குதல்

Written by vinni   // October 2, 2013   //

syriaசிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள சீன தூதரகத்தின் மீது நிகழ்த்தப்பட்ட பீரங்கி குண்டு தாக்குதலில் அந்த அலுவலக கட்டடம் பெருத்த சேதம் அடைந்தது. துப்புரவுப் பணியாளர் ஒருவரும் படுகாயமடைந்தார்.
இத்தாக்குதலில் அலுவலக கட்டடத்தின் அடிமட்ட சுவரின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதாகவும், ஜன்னல்கள் உடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

தலைநகர் டமாஸ்கஸில் ஒரே நாளில் 3 இடங்களில் பீரங்கி குண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக சிரியாவின் செய்தி நிறுவனமான சானா தெரிவித்துள்ளது. கடந்த வாரம் இதே பகுதியில் உள்ள இராக் தூதரகம் மீது பிரங்கி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் இராக்கிய பெண் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்தனர்.


Similar posts

Comments are closed.