மனநலம் குன்றிய சிறுமியை கற்பழித்து கொலை செய்தவருக்கு மரண தண்டனை

Written by vinni   // October 2, 2013   //

rapeராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமன்ட் மாவட்டத்தில் உள்ள கன்க்ரோலி பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசித்துவந்த மனநலம் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுமியை 17-1-2013 அன்று கடத்திச் சென்று கற்பழித்து விட்டதாக அதே பகுதியில் வசித்த மனோஜ் குமார் என்பவன் மீது ராஜ்சமன்ட் மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

கடந்த (2012) ஆண்டு கொண்டுவரப்பட்ட இளம்சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் குற்றவாளி மீது வழக்கு தொடரப்பட்டது.

போலீஸ் தரப்பில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் மனோஜ் குமாருக்கு மரண தண்டனை வழங்கி நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.

வழக்கு தொடரப்பட்ட ஏழே மாதங்களில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதும், இளம் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் (தடுப்பு) சட்டத்தை பயன்படுத்தி மரண தண்டனை வழங்கப்பட்ட முதல் தீர்ப்பு இது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.