மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்பினார்

Written by vinni   // October 2, 2013   //

art.mahinda.rajapaksa.afp_.gi_ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் 68ம் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமெரிக்காவின் நியூயோர்க்கிற்கு விஜயம் செய்திருந்தார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, பல நாட்டுத் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

 அமெரிக்க விஜயத்தை முடித்துக் கொண்ட ஜனாதிபதி இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மாகாணசபைத் தேர்தல்கள் நிறைவடைந்துள்ள நிலையில், முதலமைச்சர் தெரிவு, அமைச்சர்கள் நியமனம் மற்றும் பதவிப் பிரமாண நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்களை ஜனாதிபதி இன்றைய தினம் எடுப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வடமேல் மாகாண முதலமைச்சராக தயாசிறி ஜயசேகர நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் மத்திய மாகாணசபையின் முதலமைச்சர் பதவி சரத் ஏக்கநாயக்கவிற்கு வழங்குவதா அல்லது கூடுதல் விருப்ப வாக்குகளைப் பெற்றுக் கொண்ட பிரதமரின் புதல்வர் டி.எம். ஜயரட்னவிற்கு வழங்குவதா என்பது இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.


Similar posts

Comments are closed.