இலங்கையுடன் நெருங்கிய உறவுகள் தொடர்ந்தும் நீடிக்கும் – ஜெர்மனி

Written by vinni   // October 2, 2013   //

germanஇலங்கையுடன் நெருங்கிய உறவுகள் பேணப்படும் என ஜெர்மனி அறிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு அறுபது ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில், இலங்கைக்கான ஜெர்மனிய தூதுவர் ஜெர்கன் மொர்ஹார்ட் தெரிவித்துள்ளார். இராஜதந்திர உறவுகளை விடவும் மக்களுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவுகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், அண்மையில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக ஜெர்மனி கடும் விமர்சனத்தை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்; பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது அவரை அவமானப்படுத்திமைக்காக ஜெர்மனி அதிருப்தி வெளியிட்டிருந்தது.
எவ்வாறெனினும், இரு நாடுகளுக்கும் இடையில் சிறந்த உறவுகள் காணப்படுவதாகவும் இந்த உறவுகள் தொடர்ந்தும் நீடிக்கும் எனவும் ஜெர்மனிய தூதுவர் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.