நவனீதம்பிள்ளையின் அறிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு

Written by vinni   // October 2, 2013   //

Navaneetham-pillay1ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட வாய்மொழி மூல அறிக்கைக்கு அமெரிக்கா ஆதரவினை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 24ம் அமர்வுகள் அண்மையில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்றது.
இலங்கை தொடர்பிலான நவனீதம்பிள்ளையின் நிலைப்பாடு வரவேற்கப்பட வேண்டியது என அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. நவனீதம்பிள்ளையின் அறிக்கையின் மூலம் இலங்கை நிலைமைகள் வெளிப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
குறிப்பாக கருத்துச் சுதந்திரம், ஊடக சுதந்திரம், மனித உரிமை ஆர்வலர்கள் மீதான தாக்குதல்கள், நீதிமன்ற செயற்பாடுகளில் அரச தலையீடு போன்றன ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் சுடடிக்காட்டியுள்ளது.
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கும் நோக்கில் பக்கச்சார்பற்ற நியாயமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என தெரிவித்துள்ளது. அவ்வாறு செயற்பட்டால் மட்டுமே மெய்யான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும், உரிய விசாரணை நடத்தப்படாவிட்டால் அது சர்வதேச விசாரணைகளுக்கு வழியமைக்கும என்ற நவனீதம்பிள்ளையின் கருத்துக்கு உடன்படுவதாகவும் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


Similar posts

Comments are closed.