தங்களுக்கு வரும் கணவரிடம் பெண்கள் எதிர்பார்க்கும் தகுதிகள்

Written by vinni   // October 1, 2013   //

husbandandwifeபெண்கள் தங்களுக்கு வரும் கணவருக்கு சில தகுதிகள் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

ஆண்கள் தங்களுக்கு வரும் மனைவி எப்படி, எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று மனதில் ஒரு கர்ப்பனை கோட்டை கட்டியிருப்பார்கள். அதே போல் பெண்களும் தங்களுக்கு வரும் கணவருக்கு சில தகுதிகள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படி பெண்கள் எதிர்பார்க்கும் தகுதிகளில் சிலவற்றை பார்ப்போம்.

நீட்டா இருக்கணும்

தங்களுக்கு வரும் கணவர் அழகாக ஆடை அணிந்து, ஒழுங்காக தலைமுடியை சீவி, நகம் வெட்டி சுத்தமாக இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள்.

அழுக்கு பிடிக்காதுப்பா

அழுக்கு பிடித்த ஜீன்ஸ், கசம் பிடித்த சட்டை, ஒழுங்காக சீவாத முடி, அழுக்கான நகங்கள் வைத்திருக்கும் ஆண்களை பார்த்தாலே பெண்களுக்கு பிடிக்காது.

நகைச்சுவை உணர்வு

கடுகடுவென பேசும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது. ஜாலியாக சிரித்துப் பேசி, தன்னுடன் இருப்பவர்களையும் சிரிக்க வைக்கும் ஆண்களை தான் பிடிக்கும். ஓவராக சிரிக்க வைத்தால் இது காமெடி பீஸ் வேண்டாம் என்று கூறிவிட்டு போகவும் வாய்ப்பு உண்டு.

ஒரு புன்னகை

பெண்களுக்கு உம்மென்று முகத்தை வைத்திருக்கும் ஆண்களை பிடிக்காது. அதனால் முகத்தில் சிறு புன்னகையை தவழவிடுவது நல்லது.

கூல்

எதற்கெடுத்தாலும் சண்டைக் கோழியாய் திரியும் ஆண்களை விட, பெண்களுக்கு பொறுமையான, வம்புக்கு செல்லாத ஆண்களையே பிடிக்கும்.


Similar posts

Comments are closed.