சீன ஓபன் டென்னிஸ்ஸில் முதல் சுற்றிலேயே வெளியேறினார் சோம்தேவ்

Written by vinni   // October 1, 2013   //

1811e3ff-f5e3-4b19-b55e-508413d53a5d_S_secvpfசீனாவில் நடைபெற்று வரும் ஏடிபி டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரர் சோம்தேவ் தேவ்வர்மன் தகுதிச்சுற்றில் 2 போட்டிகளில் வென்று பிரதான சுற்றுக்கு முன்னேறினார். ஆனால், பிரதான சுற்றில் முதல் மற்றும் இரண்டாம் சுற்று ஆட்டங்கள் அவருக்கு மிக கடினமானதாக இருந்தது.

இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் உலகின் 31-ம் தரநிலை வீரரான பெர்னாண்டோ வெர்டாஸ்கோவை (ஸ்பெயின்) சோம்தேவ் எதிர்கொண்டார். துவக்கத்தில் வெர்டாஸ்கோவுக்கு ஈடுகொடுத்து ஆடிய சோம்தேவ் முதல் செட்டை போராடி இழந்தார். அடுத்த செட்டை வெர்டாஸ்கோ எளிதாக வென்றார். இதனால் 6-7, 3-6 என்ற செட்கணக்கில் சோம்தேவ் தோல்வியடைந்து வெளியேறினார்.

முதல் மற்றும் 2ம் தரநிலையில் இருக்கும் ஜோகோவிச், ரபேல் நடால் ஆகியோரும் 2ம் சுற்றுக்கு முன்னேறினர்.  5ம் தரநிலை வீரர் ரிச்சர்டு காஸ்கெட், 6-ம் தரநிலை வீரர் ஸ்டான்சிலாஸ் வாரின்கா, ஜான் ஐஸ்னர், டேவிடென்கோ ஆகியோரும் தங்கள் முதல் சுற்று ஆட்டங்களில் வெற்றி பெற்றனர்.


Similar posts

Comments are closed.