ஒரே கருமுட்டையில் 3 பெண் குழந்தைகள் பெற்ற‌ இங்கிலாந்து பெண்

Written by vinni   // October 1, 2013   //

7d5fc962-de0a-458d-b8fb-2878d5f150a3_S_secvpfஇங்கிலாந்து பெண்ணுக்கு ஒரே கருமுட்டையில் உருவான 3 பெண் குழந்தைகள் பிறந்தன.

இங்கிலாந்தின் சவுத் வேல்ஸ்சில் பான்டிபூல் பகுதியை சேர்ந்த பெண் கில்பெர்ட். இவர் கர்ப்பிணி ஆக இருந்தார். டாக்டரிடம் சென்று சோதனை செய்தபோது ஒரே கருமுட்டையில் 3 குழந்தைகள் உருவாகி இருந்தது தெரிய வந்தது.

இது போன்று ஒரே கருமுட்டையில் 3 குழந்தைகள் உருவாகுவது ஆபூர்வமாகும். 20 கோடி பெண்களில் ஒருவருக்குதான் இது நடைபெறும். எனவே டாக்டர்கள் அவரை தீவிரமாக பரிசோதித்தனர்.

அப்போது, இக்குழந்தைகளை தாங்கி சுமந்து பெற்றெடுக்கும் வகையில் கில்பெர்ட் உடல் நிலை இல்லை என தெரிந்தது. எனவே, இக்குழந்தைகளை கருக்கலைப்பு செய்யும்படி டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

ஆனால் அதை கில்டெர்ட்டும் அவரது கணவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அதைத்தொடர்ந்து டாக்டர்கள் அளித்த சிகிச்சையின் பலனாக கடந்த ஆகஸ்டு மாதத்தில் நியூபோர்ட்டில் உள்ள ராயல் ஜிவென்ட் ஆஸ்பத்திரியில் 3 குழந்தைகளும் பிறந்தன. அவை அனைத்தும் பெண் குழந்தைகளாகும்.

அக்குழந்தைகள் தலா 1.75 கிலோ எடை இருந்தன. இவர்களுக்கு பியான், மட்டிசான், பாய்ஜ் என பெயரிட்டுள்ளனர். 6 வாரங்கள் ஆஸ்பத்திரி பராமரிப்பில் இருந்த அக்குழந்தைகள் சமீபத்தில் வீடு திரும்பினர்.


Similar posts

Comments are closed.