இந்தியாவின் மூத்த‌ பத்திரிகையாளருக்கு சீன அரசின் உயரிய விருது

Written by vinni   // October 1, 2013   //

logo_chinadailyஇந்தியாவின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரான ரவிசங்கர் நரசிம்மன் சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கிலிருந்து வெளிவரும் ‘சீனா டெய்லி’ என்ற பத்திரிகையின் வெளிநாட்டுப் பதிப்பில் நிர்வாக ஆசிரியராக இருந்துவருகின்றார்.

இவர் கடந்த 11 ஆண்டுகளாக இப்பத்திரிகையில் பணிபுரிந்து வருகின்றார். இவருக்கு சீன அரசின் வெளிநாட்டவர்களுக்கு வழங்கும் உயரிய விருதான ‘நட்பு விருது’ இந்த வருடம் வழங்கப்பட்டுள்ளது.

20 நாடுகளைச் சேர்ந்த பல்வேறு துறைகளில் பணிபுரியும் 50 நிபுணர்களுக்கு இந்த வருடம் இந்த ‘நட்பு விருது’ அளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் நரசிம்மனும் ஒருவராவார்.

விருது வழங்கும் விழாவில் பங்கு பெற்ற சீனாவின் துணைப் பிரதமர் மா காய், ”வெளிநாட்டு நிபுணர்கள் சீன மக்களின் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். சீனாவின் சர்வதேச தொடர்புக்கும், வளர்ச்சிக்கும் அவர்கள் முக்கிய பங்காற்றுகிறார்கள். இவர்களின் பணியினை சீன மக்கள் என்றென்றும் நினைவில் வைத்திருப்பார்கள்” என்று தனது உரையில் குறிப்பிட்டார்.

சீனா தன்னுடைய கதைகளை வெளியுலகிற்கு சிறந்த முறையில் எடுத்து சொல்ல நரசிம்மன் உதவியதற்காகப் பாராட்டுப் பெற்றார் என்று மாநில வெளிநாட்டு நிர்வாக அமைப்பின் துணை இயக்குநர் லியு யாங்குவோ புகழ்ந்தார். முப்பது வருடங்களுக்கு முன் சீனாவின் தொழில்நுட்பப் பிரச்சினைகளைத் தீர்க்க வெளிநாட்டு நிபுணர்கள் இங்கு வந்தனர். ஆனால், தற்போது சீன தேசம் இங்கு வருபவர்களின் வளர்ச்சிக்கும் உதவுகின்றது. பலரும் சீனா வளர்ந்து வரும் ஓர் அரக்கன் அல்ல, கண்கவர் தேசம் என்பதனை இங்கு வந்தபின்னரே புரிந்து கொள்கின்றனர் என்று அவர் மேலும் கூறினார்


Similar posts

Comments are closed.