திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியைத் தாக்க முயற்சி : தொல்.திருமாவளவன் கண்டனம்

Written by vinni   // October 1, 2013   //

download (1)திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியைத் தாக்க நடைபெற்ற முயற்சிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

விருத்தாசலத்தில் பொதுக்கூட்டம் ஒன்றுக்குச் சென்றிருந்த கி.வீரமணியின் வாகனத்தை சிலர் வழிமறித்து தாக்க முயன்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தும், போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை.

இதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விவாதிப்பதற்காக திராவிடர் கழகத்தின் தலைமைச் செயற்குழு அக்டோபர் 7-ஆம் தேதி சென்னையில் கூட உள்ளது.


Similar posts

Comments are closed.