கம்போடியா , மெகாங் நதி திடீர் வெள்ளப் பெருக்கில் 30 பேர் பலி

Written by vinni   // October 1, 2013   //

cambodiafloodsதென்கிழக்காசிய பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றான கம்போடியாவில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது.

அந்நாட்டிலுள்ள 24 மாகாணங்களில் 9 மாகாணங்கள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன. இதனால், சுமார் ஒரு லட்சம் ஹெக்டேர் விளை நிலங்களில் இருந்த நெற் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின.

25 சுகாதார நிலையங்கள், 300 புத்த தேவாலயங்கள், 513 பள்ளிக்கூடங்கள் மற்றும் 67 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளப் பெருக்கை தாக்குப் பிடிக்க முடியாமல் சேதமடைந்துள்ளன.

மெகாங் நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி இதுவரை 30 பேர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மாயமாகி விட்டனர் என்று அவர்களது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


Similar posts

Comments are closed.