முதல்வர் விக்னேஸ்வரனுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க அழைப்பு விடுத்தால் தயார். – மகிந்த ராஜபக்ச

Written by vinni   // October 1, 2013   //

cv-vikneswaran-puthinamவடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் செல்லத் தயாராக இருப்பதாக, அவரது உதவியாளர் ஒருவர் தெரிவித்துள்ளா

தனது பெயரை வெளியிட விரும்பாத சிறிலங்கா அதிபரின் உதவியாளர் ஒருவர், கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு இது தொடர்பாக கருத்து வெளியிடுகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்தால், வடக்கு மாகாண முதல்வருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க சிறிலங்கா அதிபர் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

எனினும் அரசியலமைப்புச்சட்டத்தின் படி, உறுப்பினர்கள், ஆளுனரின் முன்னிலையிலேயே பதவிப் பிரமாணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள், ஆளுனர் சந்திரசிறி முன்பாக பதவியேற்க முடிவு செய்துள்ளதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது.

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுகுறித்து இன்னமும் எந்த முடிவையும் பகிரங்கமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.