கணவனை பழிவாங்க பேஸ்புக்கில் ஆபாசப்படம்!

Written by vinni   // September 30, 2013   //

facebook-பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கில், கணவரின் குடும்பத்தாரின் படங்களை ஆபாசமாக வெளியிட்ட மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையை சேர்ந்த பொறியாளரின் மனைவி அவரது கணவரின் குடும்பத்தை அவமானப்படுத்தும் நோக்கில், அவர்களது புகைப்படங்களை பேஸ்புக்கில் ஆபாசமாக வெளியிட்டுள்ளார்.

இதற்கு அப்பெண்ணின் தந்தையும் உடந்தையாக இருந்ததாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இதனால் பாதிப்படைந்த அந்த பொறியாளர், அவரது மனைவி மீதும், மாமனார் மீதும் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து பொலிசில் மன்னிப்பு கேட்ட அப்பெண்ணும் அவரது தந்தையும், இதுபோல் இனி நடந்துக்கொள்ளமாட்டோமென தெரிவித்துள்ளனர்.

ஆனால் சில நாட்களில் மீண்டும் இவர்கள் பொறியாளரின் குடும்பத்திற்கு தொல்லை கொடுத்துள்ளனர்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பொறியாளர் காவல் துறை ஆணையரிடம் புகார் அளித்ததன் பேரில் பொலிசார் அவரது மனைவியையும், மாமனாரையும் கைது செய்துள்ளனர்.


Similar posts

Comments are closed.