சகல அதிகாரங்களும் வடக்கு மாகாணத்திற்கு வழங்கப்படும் – லக்ஷ்மன் யாப்பா

Written by vinni   // September 30, 2013   //

Lakshman-Yapa-Abeywardenaஇலங்கையின் அரசியல் அமைப்பில் வழங்கப்பட்டுள்ள சகல அதிகாரங்களும் வடக்கு மாகாணத்திற்கு வழங்கப்படும் என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

கட்டுநாயக்கவில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாண சபையின் அதிகாரத்தை யார் கைப்பற்றியிருந்தாலும் அது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி.

போர் வெற்றிக்கு பின்னர் வடக்கில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என பலர் நினைத்தனர். ஆனால் அரசாங்கம் அப்படி செய்யாது, வடக்கு மக்களுக்கு ஜனநாயகத்திற்கான சந்தர்ப்பத்தை வழங்கியது என்றார்.


Similar posts

Comments are closed.