காணி காவல்துறை அதிகாரங்கள் தொடர்பாக‌ அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் – சி.வீ.விக்னேஸ்வரன்

Written by vinni   // September 30, 2013   //

vikneswaran-150x150காணி காவல்துறை அதிகாரங்கள் குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் வேட்பாளராக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய சி.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அரசியல் சாசனத்தில் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை உரிய முறையில் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்
காணி காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அறிவித்த போதிலும், அதிகாரங்களை வழங்க சட்டத்தில் இடமிருப்பதாகத் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை தேர்தல் விஞ்ஞாபனம் நாட்டை பிளவுபடுத்தும் வகையில் அமையவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆளும் கட்சியின் இந்தக் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது எ அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் விஞ்ஞாபனம் நியாயமானது என்பதனை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்கள் நிலங்களிலிருந்து படையினரை அகற்றிக் கொள்ளுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இடம்பெயர் மக்களின் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயார் என கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.