பக்ரைனில் அரசாங்கத்துக்கு எதிராக செயல்பட்ட 50 பேருக்கு 15 ஆண்டு ஜெயில்

Written by vinni   // September 30, 2013   //

iran prisonபக்ரைனில் அரசுக்கு எதிராக செயல்பட்ட 50 பேருக்கு 15 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

பக்ரைன் நாட்டில் சன்னி பிரிவை சேர்ந்த அரச குடும்பத்தினர் ஆட்சி செய்து வருகின்றனர். இதனால் மற்றொரு பிரிவான ஷியா பிரிவினரின் உரிமைகள் பறிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு வருகின்றன.

இவர்களுக்கு ஆதரவாக ’14 பிப்ரவரி குழு’ என்ற அமைப்பு கடந்த 2011–ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இவர்களை தீவிரவாத இயக்கம் என அரசு அறிவித்துள்ளது.

இதை தொடர்ந்து ’14 பிப்ரவரி குழு’வை சேர்ந்த 50 ஷியா பிரிவினர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது அரசுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்பட்டது.

மேலும் இவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட் இவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

குற்றம் சாட்டப்பட்டுள்ள 50 பேரில் 16 பேருக்கு தலா 15 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 4 பேருக்கு தலா 10 ஆண்டுகளும், 30 பேருக்கு தலா 5 ஆண்டுகளும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.