இந்தியா – சீனா எல்லை பாதுகாப்பு பற்றி பீஜிங்கில் பேச்சுவார்த்தை

Written by vinni   // September 30, 2013   //

india_china_barb_wire_295இந்திய எல்லைப்பகுதியில் சீன படை அடிக்கடி ஊடுருவி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனையடுத்து இந்திய – சீன எல்லைப் பகுதியில் இரு நாடுகளும் சேர்ந்து கூட்டாக பாதுகாப்பு பணியில் ஈடுபட முடிவு செய்துள்ளன.

இதுசம்பந்தமாக இருநாடுகளின் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். 4-வது கட்டமாக நேற்று பீஜிங்கில் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் இரு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது எல்லைப்பகுதியில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அடுத்த மாதம் (அக்டோபர்) 4-வது வாரத்தில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் சீனா பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

அப்போது இருநாடுகளும் கூட்டாக எல்லை பாதுகாப்பு ரோந்து பணியில் ஈடுபடுவது சம்பந்தமான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Similar posts

Comments are closed.