கல்லூரி வளாகத்துக்குள் 50 மாணவர்கள் தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை

Written by vinni   // September 30, 2013   //

image_mubi_students_massacre_550575988நைஜீரியாவில் போகோ ஹாரம் என்ற அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். வன்முறை சம்பவங்களில் ஈடுபடும் அவர்கள் பொது மக்களை கொன்று குவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று அதிகாலை 1 மணியளவில் வடமேற்கு நைஜீரியாவில் குஜ்பா என்ற கிராமத்தில் உள்ள வேளாண்மை கல்லூரி வளாகத்துக்குள் தீவிரவாதிகள் புகுந்தனர்.

பின்னர், அங்குள்ள விடுதிக்குள் நுழைந்த அவர்கள் மாணவர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அப்போது நன்றாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த மாணவர்கள் அலறியடித்தபடி எழுந்து உயிர் தப்பிக்க அங்குமிங்கும் ஓடினர்.

பலர் புதர்களுக்குள் சென்று மறைந்து கொண்டனர். இருந்தும் அவர்களை விரட்டிச் சென்று தீவிரவாதிகள் சுட்டனர். இத்தாக்குதலில் 50 மாணவர்கள் உயிரிழந்தனர். 20 பேர் காயம் அடைந்தனர்.

தகவல் அறிந்ததும் ராணுவமும், போலீசாரும் அங்கு விரைந்து சென்றனர். அதற்குள் தீவிரவாதிகள் வாகனங்களில் தப்பி சென்று விட்டனர். அவர்கள் மோட்டார் சைக்கிள்களிலும், 2 அடுக்கு மாடி பஸ்களிலும் வந்தனர்.

பல தீவிரவாதிகள் ராணுவ வீரர்களின் சீருடையில் வந்திருந்தனர். தாக்குதல் நடத்தியது மட்டுமின்றி கல்லூரி விடுதிக்கும் தீவிரவாதிகள் தீயிட்டனர். இதனால் அங்கு பலத்த சேதம் ஏற்பட்டது. அங்கு இருந்த 4 மாணவர் விடுதிகளில் மட்டும் தாக்குதல் நடத்தினர். மாணவிகள் தங்கியிருக்கும் விடுதியில் தாக்குதல் நடத்தவில்லை.


Similar posts

Comments are closed.