இரத்தினபுரி நகரில் நிர்வாணமாக நடப்பேன் – பிரேமலால் ஜயசேகர

Written by vinni   // September 30, 2013   //

premlalதோட்ட கம்பனிகளுக்கு உரிமையான எந்தவொரு காணியையாவது தான் சட்டத்தை மீறிய வகையில் பெற்றுக்கொண்டதாக யாராவது நிரூபித்தால் இரத்தினபுரி நகரில் நிர்வாணமாக நடப்பேன் என்று பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நிவித்திகலவிலுள்ள ஒரு தோட்டத்திலிருந்து ஆக்கிரமிப்பு மூலம் இவர் பெற்றுக்கொண்டதாக கூறப்படும் 3 ஏக்கர் நிலத்தை மீட்டெடுக்க விசேட அதிரடிப்பொலிஸார் அனுப்பப்பட்டதென வந்த ஊடக செய்திகள் பற்றி கருத்துத்தெரிவித்த போதே பிரதியமைச்சர் ஜயசேகர மேற்கண்டவாறு கூறினார்.

தன்னை கேவலப்படுத்த முயல்வோர் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டுமென்றும் அவர் கூறினார்.

தோட்ட காணிகளை அத்துமீறி கைப்பற்றல் தொடர்பாக நிவித்திகல பிரதேச செயலகத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் தனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூறுவோரை அவர் சபித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


Similar posts

Comments are closed.