ஒடிசா மாநிலத்தில் மின்னல் தாக்கி 7 பேர் பலி

Written by vinni   // September 29, 2013   //

lightingஒடிசா மாநிலத்தின் பல மாவட்டங்களில் பருவ மழை காரணமாக கனத்த மழை பெய்து வருகிறது. இன்று பெய்த மழையின் போது நுவபடா, போலாங்கீர், கலஹந்தி உள்ளிட்ட மாவட்டங்களின் பல இடங்களில் இடியுடம் கூடிய மின்னல் தாக்கியது.

இதில் பண்ணையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் குறைந்தது 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மற்ற 5 பேர் படுகாயமடைந்தனர். 75-க்கும்  மேற்பட்ட ஆடு, மாடுகளும் இறந்துபோயின.

கடந்த இரண்டு நாட்களில் மின்னல் தாக்கியதில் மொத்தம் 12 பேர் உயிரிழந்தனர். மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


Similar posts

Comments are closed.