டைட்டன்ஸ் அபார பந்துவீச்சில் சுருண்டது சன் ரைசர்ஸ்

Written by vinni   // September 29, 2013   //

titans_risers_005டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன் ரைசர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
ராஞ்சியில் நேற்று நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியின் 12வது ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் விளையாடியது.

அணித்தலைவர் தவானும், பார்த்தீவ் படேலும் சிறந்த தொடக்கத்தை ஏற்படுத்தித் தந்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 6.3 ஓவர்களில் 63 ஓட்டங்கள் எடுத்தது.

அதிரடியாக விளையாடிய தவான் 21 பந்துகளில் 37 ஓட்டங்களிலும், படேல் 26 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதன் பிறகு டைட்டன்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் ஹைதராபாத்துக்கு நெருக்கடி அளிக்கவே, மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு ஹைதராபாத் 145 ஓட்டங்கள் எடுத்தது.

அடுத்து களமிறங்கிய டைட்டன்ஸ் வீரர்கள், ஹைதராபாத் பந்து வீச்சாளர்களை நொறுக்கி எடுத்தது.

தொடக்க வீரர் ருடால்ப் மற்றும் டேவிட்ஸ் அதிரடியாக விளையாடினர். 32 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் அரை சதத்தை எட்டினார் டேவிட்ஸ். தொடர்ந்து விளாசிய அவர் 64 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அதற்கு அடுத்த களமிறங்கிய வீரர்களும் அதிரடியாக விளையாட, முடிவில் 16.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 147 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஹென்றி டேவிட்ஸ் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். இன்னும் ஒரு ஆட்டம் மட்டும் மீதமுள்ள நிலையில், டைட்டன்ஸ் அணி 8 புள்ளிகளுடன் பி பிரிவில் 2-ம் இடத்தில் உள்ளது.


Similar posts

Comments are closed.