டெல்லி அருமையாக உள்ளதாம்! இது மோடியின் ட்வீட்(வீடியோ இணைப்பு)

Written by vinni   // September 29, 2013   //

narendramode_speech_001டெல்லியில் இருப்பது அருமையாக உள்ளது என்று நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் நடைபெறவுள்ள பிரமாண்டக் கூட்டத்தில் உரை நிகழ்த்துகிறார்.

அதற்கு முன்னதாக அவர் வெளியிட்ட ட்விட் தகவலில், டெல்லியில் இருப்பது அருமையாக இருக்கிறது என்று மோடி தெரிவித்துள்ளார்.

5 நாட்களுக்கு முன்புதான் போபாலில் நடந்த பிரமாண்டக் கூட்டத்தில் மோடி பேசினார். அதில் அத்வானியும் கலந்து கொண்டார்.

தொடர்ந்து திருச்சியில் நடைபெற்ற இளம்தாமரைக் கூட்டத்திலும் மோடி பேசியுள்ளார்.

இந்நிலையில் இன்று டெல்லியில் விகாஸ் ரேலி என்ற பெயலிரான கூட்டத்தில் மோடி பங்கேற்றுப் பேசுகிறார். இந்தக் கூட்டத்திற்கு 5 லட்சம் பேர் திரண்டு வருவார்கள் என பாஜக நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் நடைபெறுவதால் இந்தக் கூட்டத்தை மிக முக்கியமாக கருதுகிறது பாஜக. பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மோடி, முன்னேற்றத்திற்கான கூட்டம் என்ற பெயரிலான இந்தக் கூட்டத்தில் முக்கிய உரையாற்றவுள்ளார்.

டெல்லியில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மோடியின் இன்றைய கூட்டம் டெல்லி பாஜகவுக்கு பெரும் பலமாக அமையும் என்றும் அந்தக் கட்சி நம்புகிறது.

மேலும் இந்தக் கூட்டத்திற்கு வருமாறு 80 வெளிநாட்டுத் தூதரகங்களுக்கும் அழைப்பு போயுள்ளது. இதில் 35 நாட்டுத் தூதரகங்கள் சார்பில் பிரதிநிதிகள் வருவதாக உறுதியளித்துள்ளனராம்.

இந்தக் கூட்டத்திற்காக வட மேற்கு டெல்லியின் ரோஹினி பகுதியில் ஜப்பான் பூங்காவில் பிரமாண்ட மேடையும் நிறுவப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் 45 நிமிடங்களுக்கு மோடி உரை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மைதானம் முழுவதும் எல்இடி திரைகளும் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் நகர் டெல்லியின் பல பகுதிகளிலும் திரைகளை வைத்து அவரது பேச்சை நேரடியாகவும் ஒளிபரப்பவுள்ளனர்.

மேலும் வரலாறு காணாத பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.