பாகிஸ்தானில் கொடூரம் : சகோதரிகள் இருவர் கற்பழித்து கொலை

Written by vinni   // September 29, 2013   //

rapeபாகிஸ்தானில் சகோதரிகள் இருவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் லாகூரிலிருந்து 80 கிலோமீற்றர் தொலைவில் குஜ்ரான்வாலா என்ற ஊர் உள்ளது.

இங்கு வசித்து வந்த 16 மற்றும் 17 வயதுடைய சகோதரிகள் இருவர் கல்லூரியில் படித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 26ம் திகதி கல்லூரிக்கு சென்ற இருவரும் வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து உறவினர்கள் தேடிய போது, 2 சகோதரிகளின் உடலும் துப்பாக்கி குண்டுகள் துளைக்கப்பட்டு புறநகரிலுள்ள கால்வாயில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பிரேத பரிசோதனையில் இருவரும் கற்பழிக்கப்பட்டு பிறகு சுட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இதே பகுதியில் 5 வயது சிறுமியை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.