இறப்பதற்கு முன் மகன், மருமகளுக்கு அறிவுரை வழங்கிய டயானா

Written by vinni   // September 29, 2013   //

diana_004இங்கிலாந்தின் மறைந்த இளவரசி டயானா, தனது மகன் வில்லியம் மற்றும் அவரது மனைவிக்கு அறிவுரை வழங்கி அதை டேப்பில் பதிவு செய்து வைத்தது தற்போது தெரியவந்துள்ளது.
இங்கிலாந்து இளவரசி டயானா கடந்த 1997ம் ஆண்டு பாரீஸில் நடந்த கார் விபத்தில் பலியானார்.

ஆனால் அது விபத்து அல்ல ராஜ குடும்பத்தினரின் சதி என்று கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் டயானா தனது உயிருக்கு ஆபத்து இருப்பது தெரிந்து தனது மூத்த மகன் வில்லியம் மற்றும் அவரின் வருங்கால மனைவிக்கு அறிவுரை வழங்கி அதை டேப்பில் பதிவு செய்து வைத்தது தெரிய வந்துள்ளது.

அந்த டேப்பில், உங்களின் குழந்தைகளை எனக்காகவும் பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களை நான் மிகவும் நேசிப்பேன், பார்த்துக் கொண்டே இருப்பேன் என்பதை அவர்களிடம் தெரிவியுங்கள் என்று பேசியுள்ளார்.

மேலும், வில்லியமின் மனைவி அழகாகவும், அறிவாளியாகவும், யாரையும் சார்ந்திராதவராகவும் இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

வில்லியமின் வருங்கால மனைவிக்காக பேசுகையில், நான் உன்னை கொண்டாடுவேன், நாம் வெகு விரைவில் தோழிகளாவோம் என்று எனக்கு தெரியும்.

நீ நிச்சயமாக ஸ்பெஷல் ஆனவளாக இருக்க வேண்டும், அப்படி இல்லை என்றால் என் வில்லியமின் மனைவியாக முடியாது என்று தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.