ஐதேகவின் தோல்விக்கு ரணிலே காரணம் – மைத்திரி

Written by vinni   // September 29, 2013   //

Ranil_wickramasingheநடந்துமுடிந்த மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியுற்றமையானது எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை, மக்கள் நிராகரித்துள்ளமையை புலப்படுத்துவதாக அந்த கட்சியின் தென் மாகாணசபை உறுப்பினர் மைத்திரி குணரத்ன தெரிவித்தார்.

நேற்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தமது கட்சியின் தலைவரை மாற்றுமாறு கோரி எதிர்வரும் 5ஆம் திகதி தெவிநுவரவிலிருந்து கொழும்பு வரை பாத யாத்திரை செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மக்களால் நிராகரிக்கப்பட்ட தலைவரை பாதுகாப்பளித்து ஒப்பந்தத்தில் வைத்திருக்க வேண்டாம் என இச் சந்தர்ப்பத்தில் மைத்திரி குணரத்ன, மங்கள சமரவீரவிடம் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் தோல்வியை அக் கட்சிக்கான பொறுப்பை அந்த கட்சியின் அப்பாவித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் மீது சுமத்துவதாக தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.

நாட்டை அபிவிருத்தி செய்த அரசுடன் அந்த அப்பாவி மனிதரால் என்ன செய்ய முடியும் என விமல் வீரவங்ச கேள்வி எழுப்பினார்.


Similar posts

Comments are closed.