பொலிசின் அவசரத்திற்கு உதவும் நானோ கார்

Written by vinni   // September 29, 2013   //

nano_police_002டெல்லி பொலிசாரின் அவசர சேவைப் பிரிவு வாகனமாக டாடா நானோ பயன்படுத்த உள்ளது.
டெல்லி, பிரகதி மைதானத்தில் நடந்து வரும் சர்வதேச பாதுகாப்பு துறை உபகரண கண்காட்சியில் இந்த கஸ்டமைஸ் நானோ கார் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை செயலாளர் அணில் கோஸ்வாமி இந்த காரை அறிமுகம் செய்து வைத்தார்.

டெல்லி பொலிசார் நானோ கார் குறித்து கூடுதல் தகவல்களை கூறுகையில், டெல்லி பொலிஸ் கட்டுப்பாட்டு அறையின் அவசர சேவைப் பிரிவு வாகனமாக நானோ கார் பயன்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு அவசர உதவி தரும் வகையில் இந்த நானோ கார்கள் பயன்படுத்தப்படும்.

மருத்துவ உபகரணங்கள், முதலுதவி சிகிச்சைக்கான வசதிகளை இந்த நானோ கார் கொண்டிருக்கும். வெள்ளை நிற கார்களில் நீலம் மற்றும் சிவப்பு வண்ணம் தீட்டப்பட்டு டெல்லி பொலிஸ் சின்னமும் பொறிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நானோ கார்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவுவதற்கு ஏற்ற வகையில் பெண் பொலிஸ் ஒட்டுனர்களே இயக்கலாம்.

மேலும் டெல்லி பொலிஸ் கட்டுப்பாட்டு அறையின் அவசர சேவைப் பிரிவில் பெரிய வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை போக்குவரத்து நெரிசலில் எளிதாக செல்ல ஏதுவாக இல்லை.

எனவே, போக்குவரத்து நெரிசல் மற்றும் குறுகிய சாலைகளில் கூட எளிதாக செல்லும் நானோ காரை இனி பயன்படுத்த உள்ளோம் என்று இந்த கார்களை கஸ்டமைஸ் செய்து சப்ளை செய்யும் கிராண்ட் அமைப்பின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நானோ காரில் 2 சிலிண்டர் 624சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 38 எச்பி ஆற்றலையும், 51 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். 4 பேர் அமரும் வசதி கொண்டதுடன் 4 மீட்டர் டர்னிங் ரேடியஸ் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.