செக்ஸ் சுற்றுலா செல்லும் இத்தாலியர்கள்

Written by vinni   // September 29, 2013   //

09-floor-sex-300சிறுமிகளிடம் உடல் சுகம் அனுபவிக்கும் நோக்கத்தில் ஆண்டுதோறும் சுமார் 80 ஆயிரம் இத்தாலியர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

உலகளாவிய அளவில் சிறுமிகள் கடத்தப்படுவதும், அவர்கள் பாலியல் தொழிலில் தள்ளப்படுவதும் பெருகிக்கொண்டே வருகிறது. உலகின் ஏதாவது ஒரு மூலையில் இரண்டு நிமிடத்திற்கு ஒருமுறை யாராவது ஒரு சிறுமி பாலியல் கொடுமைக்குள்ளாவதாக சமீபத்திய ஆய்வறிக்கை தெளிவுப்படுத்தியுள்ளது.

ஏழ்மை மிகுந்த நாடுகளில் வசிக்கும் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் நோக்கில் பல சமூக விரோதிகள் கடத்தி வந்து பணம் சம்பாதிப்பது எல்லாம் பழைய நடைமுறையாகி விட்டது.

இதில் புதிய பரிணாமத்தை இத்தாலியர்கள் தற்போது எட்டியுள்ளனர். முன்னேறிய நாடான இத்தாலியில் கூட சிறுமிகளை விபசாரத்தில் ஈடுபடுத்துவதும், சிறுமிகள் தாராளமாக கிடைக்கும் வெளிநாடுகளுக்கு இத்தாலியர்கள் ´செக்ஸ் சுற்றுலா´ செல்வதும் தற்போது வெகுவாக அதிகரித்து வருகிறது.

இவ்வகையில், ஆண்டுதோறும் சுமார் 80 ஆயிரம் இத்தாலியர்கள் உடல் சுகத்துக்காக சிறுமிகளை தேடி வெளிநாடுகளுக்கு செக்ஸ் சுற்றுலா சென்று வருவதாக ´எக்பட் இட்டாலியா´ என்ற தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்நிறுவனத்துக்கு 70க்கும் மேற்பட்ட நாடுகளில் கிளை அமைப்புகள் உள்ளன. அந்த அமைப்புகளில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.