போஸ்டருக்கு நாங்கள் பொறுப்பில்லை: லதா ரஜினிகாந்த்

Written by vinni   // September 28, 2013   //

rajinikanth_modi_002சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தையும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியையும் இணைத்து போஸ்டர் வெளியிட்டிருப்பது குறித்து நாங்கள் கருத்து சொல்ல ஒன்றுமில்லை என்று லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நடந்த மோடி கூட்டத்திற்கு முன்பாக ரஜினியையும், மோடியையும் இணைத்து ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தின.

மேலும் ரஜினியே நேரில் வந்து மோடியைப் பார்க்கப் போகிறார் என்றும் வதந்தி கிளப்பி விட்டனர்.

தமிழக பாஜக தலைவர்களும் தொடர்ந்து ரஜினி, எங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று வாய் வலிக்க பேசி வருகின்றனர்.

ஆனால் ரஜினிகாந்த் தரப்பிலிருந்து இதுவரை எந்த கருத்தும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் ரஜினி குடும்பத்திலிருந்து முதல் முறையாக ஒரு கருத்து வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த்தின் மனைவி லதா ரஜினிகாந்த் இதுகுறித்து கூறுகையில், இதில் நாங்கள் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அவர்கள்தான் போஸ்டர் போட்டுள்ளனர். இதற்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

மேலும் மீடியா வெளிச்சத்திலிருந்து விலகியிருக்கவே நாங்கள் விரும்புகிறோம் என்று கூறியுள்ளார்.

ரஜினி தரப்பில் சிலர் கூறுகையில் இப்போது ரஜினிகாந்த்தின் கவனம் முழுவதும் கோச்சடையான் படத்தில் மட்டுமே உள்ளது.

வேறு எது குறித்தும் அவர் கவனம் செலுத்தவில்லை. குறிப்பாக அரசியலிலிருந்து அவர் வெகு தூரத்தில் ஒதுங்கியிருக்கிறார் என்று கூறுகின்றனர்.


Similar posts

Comments are closed.