பொதுநலவாய நாடுகள் அமர்வு இலங்கையில் நடத்தப்படக் கூடாது – சர்வதேச மன்னிப்புச் சபை

Written by vinni   // September 28, 2013   //

Amnesty-International-Logoஇலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு நடத்தப்படக் கூடாது என சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது. இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து திருப்தி அடைய முடியாது எனவும் இதனால், இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு நடத்தப்படுவதனை தடை செய்ய வேண்டுமெனவும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. மனித உரிமை விவகாரத்தில் பொதுநலவாய நாடுகள் அமைப்பு தலைமைத்துவத்துடன் செயற்பட வேண்டுமென தெரிவித்துள்ளது.

இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து, பொதுநலவாய நாடுகள் அமைப்பு வெட்கப்படக்கூடிய வகையில் மௌனம் காத்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளது. கடந்த கால குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல், விசாரணை நடாத்துதல் மற்றம் தற்போது இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது,
இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை நடாத்;த ஆதரவு வழங்குவதனை விடவும், யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை நடாத்த அழுத்தம் பிரயோகிக்க வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ளது. பொதுநலவாய நாடுகள் அமர்வுகளை இலங்கையில் நடாத்த அனுமதிப்பதன் மூலம் குற்றச் செயல்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் அமைந்துவிடும் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.


Similar posts

Comments are closed.