பூகம்ப பகுதிக்கு உணவு ஏற்றிச்சென்ற ஹெலிகாப்டர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் : பாதிப்பில் இருந்து ஹெலிகாப்டர் தப்பியது.

Written by vinni   // September 28, 2013   //

pakistan-flood-devastation-continues-growபாகிஸ்தானில் பூகம்ப பகுதிக்கு உணவு ஏற்றிச்சென்ற ஹெலிகாப்டர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் அவாரன், இயக்மா மாவட்டங்களில் நேற்று முன்தினம் 7.7 ரிகடர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது. அதில் வீடுகள் இடிந்ததில் சாவு எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ளது. 765 பேர் காயம் அடைந்தனர்.

பூகம்பம் பற்றிய தகவல் அறிந்ததும் நேற்று முன்தினம் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவன தலைவர் மேஜர் ஜெனரல் சயீத் அலீம் ஒரு ராணுவ ஹெலிகாப்டரில் அங்கு சென்றார்.

அந்த ஹெலிகாப்டர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். நல்ல வேளையாக அந்த ஹெலிகாப்டர் தாக்குதலில் இருந்து தப்பியது.

இந்த நிலையில், நேற்று பூகம்பம் தாக்கிய பகுதியான அவாரன், உள்ளிட்ட பகுதிகளுக்கு ஒரு ஹெலிகாப்டர் உணவு பொருட்களை ஏற்றிச் சென்றது. அதன் மீதும், தீவிரவாதிகள் மீண்டும் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள்.

அவாரனில் உள்ள தாஸ்கஸ், டெக்சில் என்ற இடத்தில் உணவு பொருட்களை இறக்க தரை இறங்கியபோது இத்தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது சிறிய அளவில் தாக்குதல் நடத்தப்பட்டதால் பாதிப்பில் இருந்து ஹெலிகாப்டர் தப்பியது.


Similar posts

Comments are closed.