அமெரிக்க விமானம் கொலம்பியாவில் விழுந்து நொறுங்கியது: விமானி பலி, மற்றொரு விமானி படுகாயம்

Written by vinni   // September 28, 2013   //

Military aircraft crashes in Cauca province, Colombiaதென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுக்கு எதிராக கொரில்லா படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவர்கள் கோகா என்ற செடியில் இருந்து தயாரிக்கப்படும் கோகைன் போதைப் பொருள் வர்த்தகம் மூலம் பணம் சம்பாதித்து ஆயுதங்களை வாங்குகின்றனர்.

எனவே கோகா செடியை அமெரிக்கா உதவியுடன் கொலம்பியா அழித்து வருகிறது. அதற்காக அமெரிக்கா விமானங்கள் வழங்கி வருகிறது. அதில் ஆட்களை ஏற்றி சென்று அழிப்பு வேலை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று காகுயடா மாகாணத்தில் மலைப்பகுதியில் பயிரிட்டுள்ள கோகா செடியை அழிக்கும் பணிக்கு ஒரு அமெரிக்க விமானம் புறப்பட்டு சென்றது. அதில் 2 விமானிகள் இருந்தனர்.

வானில் பறந்தபோது திடீரென அந்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது. அதில் ஒரு விமானி பரிதாபமாக இறந்தார். உடன் இருந்த மற்றொரு விமானி படுகாயம் அடைந்தார்.

விபத்து நடந்த பகுதியில்தான் அரசுக்கு எதிராக போராடும் கொரில்லா படையினர் பதுங்கி உள்ளனர். அவர்களால் இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என கருதப்பட்டது.

ஆனால் எந்திர கோளாறு காரணமாகவே, இந்த விபத்து நடந்துள்ளதாக அமெரிக்கா தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Similar posts

Comments are closed.