கனேடிய பிரதமர் பொதுநலவாய அமர்வில் பங்கேற்பதன் மூலம் வடமாகாணத்தில் தெரிவுசெய்யப்பட்டுள்ள அரசாங்கத்துக்கு உதவ முடியும்

Written by vinni   // September 28, 2013   //

1Harper98924217இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் அமர்வில் கனேடிய பிரதமர் பங்கேற்பதன் மூலம் இலங்கை அரசாங்கத்துக்கு அதிக அழுத்தங்களை பிரயோகிக்க முடியும் என்று செய்திதாள் ஒன்று கோரியுள்ளது.  தெ குளோபல் மெயில் என்ற கனேடிய செய்திதாள் தமது ஆசிரியர் தலையங்கத்தில் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.

இலங்கையின் வடமாகாணத்தில் தற்போது தமிழர்கள் தமக்குரிய நிர்வாகத் தலைமையை தெரிவு செய்துள்ளனர்.

இதன்போது அந்த தலைமையை தெரிவு செய்வதை தடுக்கும் முகமாக பல்வேறு முறைகேடான சம்பவங்கள் நடத்தப்பட்டன.

குறிப்பாக வேட்பாளர் அனந்தி சசிதரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி விட்டதாக தெரிவிக்கும் உண்மைக்கு புறம்பான செய்தியை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் ஒரு செய்திதாளை போன்ற போலியான செய்திதாள் தயாரிக்கப்படடு அதில் பிரசுரமாகியிருந்தது.  இது பத்திரிகை சுதந்திரத்தை முழுமையாக மறுக்கும் செயற்பாடாகும்.

இந்தநிலையில் சுமார் 3 லட்சம் தமிழர்களை கொண்டுள்ள கனடாவின் பிரதமர் தமது பங்குக்கு கொழும்பு மாநாட்டில் பங்கேற்று ராஜபக்சவின் அரசாங்கத்துக்கு அழுத்தத்தை அதிகரிக்கவேண்டும்.

இதன்மூலம் வடமாகாணத்தில் தெரிவுசெய்யப்பட்டுள்ள அரசாங்கத்துக்கு கனடா உதவ முடியும் என்று தெ குளோபல் மெயில் சுட்டிக்காட்டியுள்ளது.


Similar posts

Comments are closed.